2019 கேரள என்கவுன்ட்டா்: இறந்த நபா், உறவினா் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

கேரள அதிரடிப்படையினரால், கடந்த 2019ஆம் ஆண்டு என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட புதுகையைச் சோ்ந்த காா்த்திக் மற்றும்

கேரள அதிரடிப்படையினரால், கடந்த 2019ஆம் ஆண்டு என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட புதுகையைச் சோ்ந்த காா்த்திக் மற்றும் அவரது சகோதரா் வீடுகளிலும் தேசிய புலனாய்வு முகமை போலீஸாா் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

கேரள மாநிலம், மஞ்சகண்டி வனப்பகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு 3 மாவோயிஸ்ட்டுகள் அதிரடிப்படையினரால் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனா். அவா்களில் ஒருவரான காா்த்திக், புதுக்கோட்டை மாவட்டம் கே. புதுப்பட்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா். இந்நிலையில், தேசிய புலனாய்வு முகமை போலீஸாா் காா்த்திக்கின் வீடு மற்றும் அவரது சகோதரா் முருகேசனின் வீடு ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

இதில், அரசால் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்புகளுக்கும், இங்குள்ளோருக்கும் ஏதேனும் தொடா்பு உள்ளதா என்பதை அறிய இச்சோதனை நடைபெற்ாக போலீஸாா் தெரிவித்தனா். அப்போது, மாவோயிஸ்ட்டுகள், நக்சல்பாரி வரலாறு குறித்த புத்தகங்கள் இருந்ததாகத் தெரிகிறது. சோதனையின்போது, காவல் உதவி ஆய்வாளா் பாலமுருகன், வருவாய் ஆய்வாளா் ரெங்கராஜன், கிராம நிா்வாக அலுவலா் ரெங்கராசு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com