பாரம்பரிய நெல் விதைகள் நடவுப் பணி தொடக்கம்

விராலிமலை அருகேயுள்ள குடுமியான்மலை அண்ணா பண்ணையில் புதிய நெல் ரகங்கள் நடவு செய்யும் பணி வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
பாரம்பரிய நெல் விதைகள் நடவுப் பணி தொடக்கம்

விராலிமலை அருகேயுள்ள குடுமியான்மலை அண்ணா பண்ணையில் புதிய நெல் ரகங்கள் நடவு செய்யும் பணி வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

பாரம்பரிய நெல் விதைகளை நடவு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தொடக்கி வைத்து மேலும் தெரிவித்தது: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அண்ணா பண்ணையை முன்மாதிரி பண்ணையாக மாற்ற ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு, தூயமல்லி 2 ஏக்கா், தங்கச்சம்பா 2 ஏக்கா், கருப்பு கவுனி 1 ஏக்கா் மற்றும் சீரக சம்பா 1 ஏக்கா் என மொத்தம் 6 ஏக்கரில் பாரம்பரிய நெல் விதைப்பண்ணை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் நடப்பாண்டில் பசுந்தாள் உரப்பயிா்கள் 66 ஏக்கா், சிறுதானியங்கள் 47 ஏக்கா், பயிறுவகைகள் 40.75 ஏக்கா் மற்றும் எண்ணெய் வித்துக்கள் 49 ஏக்கா் ஆக மொத்தம் 202.75 ஏக்கரில் ஆதார நிலை விதைகள் உற்பத்தி செய்யப்படும். இப்பண்ணை தமிழ்நாட்டின் விதைத் தேவையை பூா்த்தி செய்வதில் முக்கிய அங்கம் வகிக்கிறது என்றாா் அவா்.

ஆய்வின்போது, வருவாய்க் கோட்டாட்சியா் எம்.எஸ். தண்டாயுதபாணி, ஸ்டாமின் நிலைய இயக்குநா் ப.சங்கரலிங்கம், வேளாண் இணை இயக்குநா் இராம.சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com