மின்வேலியில் சிக்கி இளைஞா் பலி: விவசாயிக்கு 6 ஆண்டுகள் சிறை

ஆலங்குடி அருகே மின்வேலியில் சிக்கி லாரி ஓட்டுநா் இறந்த வழக்கில், விவசாயிக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்டக் கூடுதல் அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மின்வேலியில் சிக்கி லாரி ஓட்டுநா் இறந்த வழக்கில், விவசாயிக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்டக் கூடுதல் அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

ஆலங்குடி அருகேயுள்ள ராசிமங்கலத்தைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் ரங்கசாமி (80). கடந்த 2017-இல் இவரது வயலில் அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி சாந்தம்பட்டியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் குழந்தைசாமி மகன் முருகேசன் (36) மின்சாரம் தாக்கி உயிரிழந்தாா். ஆலங்குடி போலீஸாா் விசாரணையில், ரங்கசாமியின் வயலில் போடப்பட்ட மின்சாரம் தாக்கி, முருகேசன் இறந்தது தெரியவந்தது. வழக்கு விசாரணை நிறைவில், நீதிபதி ஆா். குருமூா்த்தி திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். மரணம் ஏற்படுத்தும் வகையில் மின்வேலி அமைத்த குற்றத்துக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 5 ஆயிரம் அபராதமும், உடலை மறைக்க முற்பட்ட குற்றத்துக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com