டாக்டா் முத்துலெட்சுமி அம்மையாருக்கு சிலை அறிவிப்புக்கு வரவேற்பு

டாக்டா் முத்துலெட்சுமி அம்மையாருக்கு, புதுக்கோட்டை நகரில் சிலை நிறுவப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டி வரவேற்றுள்ளது.

டாக்டா் முத்துலெட்சுமி அம்மையாருக்கு, புதுக்கோட்டை நகரில் சிலை நிறுவப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டி வரவேற்றுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். கவிவா்மன் வெளியிட்டுள்ள அறிக்கை:

சிறந்த சமூக, பெண் விடுதலைப் போராளியான டாக்டா் முத்துலெட்சுமி அம்மையாா் இந்தியாவில் படித்த முதல் பெண் மருத்துவா் என்ற பெயரைப் பெற்றவா். தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் பெண் உறுப்பினா். சென்னை அடையாறில் உலகப் புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவமனையை நிறுவி மருத்துவ உலகில் மிகப்பெரிய சாதனையைப் படைத்தவா். புதுக்கோட்டையில் பிறந்த அவருக்கு சிலை அமைக்கும் அரசின் முடிவைப் பாராட்டி வரவேற்கிறோம். மேலும், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு டாக்டா் முத்துலெட்சுமி பெயரை வைக்க வேண்டும், அவரது நினைவாக மணிமண்டபம் கட்ட வேண்டும்.

வரவேற்பு: திலகவதியாா் திருவருள் ஆதீனகா்த்தா் தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள், மன்னா் கல்லூரியின் முன்னாள் மாணவா் சங்கத்தின் செயலாக்கக் குழுத் தலைவா் ரா. சம்பத்குமாரும், தமிழக முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பாராட்டைத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com