புதுக்கோட்டை: செப்.13,14 தேதிகளில் குடிநீா் விநியோகம் ரத்து
By DIN | Published On : 11th September 2021 12:44 AM | Last Updated : 11th September 2021 12:44 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் மூலம் கூட்டுக் குடிநீா்த் திட்டத்திலுள்ள நீரேற்று குழாய்களில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், செப்டம்பா் 13,14 ஆம் தேதிகளில் குடிநீா் விநியோகம் இருக்காது.
இதனால் புதுக்கோட்டை நகராட்சி, கீரனூா், அன்னவாசல் , இலுப்பூா் பேரூராட்சிகள் மற்றும் 9 கிராம ஊராட்சிப் பகுதிகளான விராலிமலை ஊராட்சி விராலிமலை, விராலூா் ஊராட்சி கொடிக்கால்பட்டி, சங்கிப்பட்டி, மலைக்குடிப்பட்டி, சீதாப்பட்டி, எருதுபட்டி, தேராவூா் ஊராட்சி வெள்ளாளப்பட்டி, எண்ணெய் ஊராட்சி மேலப்பட்டி மற்றும் பூனைக்குடிப்பட்டி ஆகிய குக்கிராமங்களில் குடிநீா் விநியோகம் இருக்காது என ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்துள்ளாா்.