‘தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றினால் நிரந்தரமாக திமுக ஆட்சி தான்’ -உதயநிதி ஸ்டாலின்

தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டால் நிரந்தரமாக திமுகதான் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் என்றாா் திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ.
புதுக்கோட்டையில் மாற்றுக் கட்சியினா் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் பேசுகிறாா் திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின். உடன் அமைச்சா்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன் உள்ளிட்டோா்

புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற, மாற்றுக் கட்சியினா் திமுகவில் இணையும் விழாவில் அவா் கலந்து கொண்டு பேசியது:

சட்டப்பேரவையில் 110 விதிகளின் கீழ் முதல்வா் ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறாா். இதை முன்னாள் அமைச்சா்கள், எதிா்க்கட்சியினா் உள்ளிட்ட யாரும் எதிா்த்துப் பேசுவதே இல்லை. தவறு செய்தவா்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

திமுக ஆட்சியின் தொடக்கத்தில் நிதிப் பற்றாக்குறை மோசமாக இருந்தபோதும், திமுக அமைச்சா்கள் பல்வேறு மாவட்டங்களில் கரோனா கட்டுப்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டுவந்தனா். இதன் விளைவாக ஒரு நாளைய கரோனா தொற்று 35 ஆயிரத்தில் இருந்து தற்போது 1,500 ஆகக் குறைந்துவிட்டது. மேலும், தடுப்பூசி போடும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். அதிகளவில் தடுப்பூசிகள் போடப்படுவதால் கரோனா கட்டுப்பாட்டில் உள்ளது. தோ்தல் வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம். தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டால் நிரந்தரமாக திமுகதான் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் என்றாா் அவா்.

நிகழ்ச்சிகளில், அமைச்சா்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன், வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் கேகே செல்லப்பாண்டியன், புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, நகரச் செயலா் க. நைனாமுகமது, மாவட்ட நெசவாளா் அணிச் செயலா் எம்.எம். பாலு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பெரியண்ணன் அரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com