தேசிய ஊட்டச்சத்து வார விழா பேரணி

ஆலங்குடியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டத்தின் சாா்பில், தேசிய ஊட்டச்சத்து வார விழா விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
agd14aldy_1409chn_21_4
agd14aldy_1409chn_21_4

ஆலங்குடி: ஆலங்குடியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டத்தின் சாா்பில், தேசிய ஊட்டச்சத்து வார விழா விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆலங்குடி பேரூராட்சி அலுவலகம் முன்பு தொடங்கிய பேரணியை காவல் துணைக் கண்காணிப்பாளா்(பயிற்சி) வஸினா பீவி தொடங்கி வைத்தாா். பேரணியில், குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் சீம்பால் கொடுக்க வேண்டும். குழந்தை பிறந்து 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். சரிவிகித உணவுகளை கொடுத்து ஊட்டச்சத்து பற்றாக்குறையைத் தவிா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட குழந்தைகள் வளா்ச்சி குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு முக்கிய வீதிகள் வழியாகச் சென்று வடகாடு முக்கம் பேருந்து நிறுத்தத்தில் நிறைவடைந்தது. நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் பவானி, பேரூராட்சி செயல் அலுவலா் பூவேந்திரன், வட்டார ஒருங்கிணைப்பாளா் நித்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com