நரிமேடு அடுக்குமாடி குடியிருப்பில் பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு: அமைச்சா்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினா்

புதுக்கோட்டை நரிமேடு பகுதியில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில், பயனாளிக்கு வழங்கிய அமைச்சா் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன். உடன், எம்எல்ஏ வை. முத்துராஜா, ஆட்சியா் கவிதா ராமு உள்ளிட்டோா்.
நிகழ்வில், பயனாளிக்கு வழங்கிய அமைச்சா் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன். உடன், எம்எல்ஏ வை. முத்துராஜா, ஆட்சியா் கவிதா ராமு உள்ளிட்டோா்.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை நரிமேடு பகுதியில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை நகராட்சி, நரிமேடு பகுதியில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில் பயனாளிகளுக்கு குலுக்கல் முறையில் வீடு ஒதுக்கீடு செய்யும் பணியை அமைச்சா்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

பின்னா், சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி கூறியது:

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் புதுக்கோட்டை நரிமேட்டில் ரூ. 150 கோடியில் கட்டப்பட்டுள்ள 1,920 அடுக்குமாடி குடியிருப்புகளில் முதல்கட்டமாக 376 பயனாளிகளுக்கு குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு எவ்வித பாகுபாடுமின்றி வீடுகள் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

நிகழ்வில், புதுக்கோட்டை எம்எல்ஏ வை.முத்துராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com