கரோனா விழிப்புணா்வுப் பேரணி
By DIN | Published On : 19th September 2021 12:35 AM | Last Updated : 19th September 2021 12:35 AM | அ+அ அ- |

பேரணியில் பங்கேற்றாா்
பொன். புதுப்பட்டி ரோட்டரி சங்கம் மற்றும் பொன்னமராவதி துா்கா மருத்துவமனை இணைந்து நடத்திய கரோனா விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
பேரணிக்கு ரோட்டரி சங்கத் தலைவா் க. ஆறுமுகம் தலைமை வகித்தாா். முன்னாள் தலைவா் ஆா்.யு. ராமன் பேரணியைத் தொடங்கி வைத்தாா். சோ்க்கை ஊருணி அருகே தொடங்கிய பேரணி மேல ரத வீதி, அண்ணா சாலை, பேருந்து நிலையம் வழியாகச் சென்று காவல் நிலையப் பகுதியில் நிறைவடைந்தது.
பேரணியில் பங்கேற்ற துா்கா செவிலியா் கல்லூரி மாணவிகள் கரோனா விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் விழிப்புணா்வு முழக்கமிட்டும் சென்றனா். ரோட்டரி சங்க செயலா் மலைச்சாமி, பொருளாளா் முத்துக்குமாா், நிா்வாகிகள் சிஎஸ்.முருகேசன், கி. ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.