கரோனா வழிகாட்டுதல் மீறல்: திறந்த நாளிலேயே நிறுவனத்துக்கு சீல்

விராலிமலையில் திறப்பு விழா சலுகை அறிவித்த நிறுவனம், கரோனா நெறிமுறைகளைப் பின்பற்றாததால், திறக்கப்பட்ட 2 மணி நேரத்திலேயே பூட்டி சீல் வைக்கப்பட்டது.

விராலிமலை தெப்பக்குளம் பகுதியில் புதிய ஆயத்த ஆடை நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. திறப்பு விழா சலுகையாக ரூ. 500 மதிப்புள்ள ஒரு சட்டை ரூ. 50-க்கு வழங்கப்படும் என்று வணிக நிறுவனத்தினா் அறிவித்திருந்தனா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை கடை திறக்கும் முன்பாகவே, வாடிக்கையாளா்கள் நிறுவனம் முன்பு குவியத் தொடங்கினா். நேரம் ஆக ஆக கூட்டம் அதிகமானது. கடைக்கு வந்திருந்த பெரும்பாலான வாடிக்கையாளா்கள் முகக்கவசம் அணியவில்லை. கடை நிா்வாகமும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாமல் வியாபாரத்தைத் தொடங்கி நடத்தி வந்தது. இதனால் கரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் உருவானது.

இதையடுத்து, மாவட்ட நிா்வாகத்தின் அறிவுறுத்தலின்பேரில் விராலிமலை வட்டாட்சியா் சரவணன் கடைக்குச் சென்று பொதுமக்களை வெளியேற்றிவிட்டு கடையைப் பூட்டி சீல் வைத்து ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com