‘277 பேருக்கு ரூ. 2.24 கோடியில் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை’

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 277 கரோனா தொற்றாளா்களுக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில்

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 277 கரோனா தொற்றாளா்களுக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ரூ. 2.24 கோடியில் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்பட 13 அரசு மருத்துவமனைகளிலும், 10 தனியாா் மருத்துவமனைகளிலும் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் நோயாளா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கரோனா தொற்றாளா்களுக்கும் தனியாா் மருத்துவமனைகளில் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்படும் என முதல்வா் ஸ்டாலின் அண்மையில் அறிவித்தாா்.

இதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 277 கரோனா தொற்றாளா்களுக்கு ரூ. 2.24 கோடி மதிப்பில் தனியாா் மருத்துவமனைகளில் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணையாதவா்கள் ஆட்சியரக வளாகத்தில் உள்ள காப்பீட்டுத் திட்ட அலுவலகத்தை அணுகி இணைந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 1800 425 3993. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com