குழந்தைகள் அறிவியல் மாநாடு வழிகாட்டி ஆசிரியா்களுக்கு இணைய வழிப் பயிற்சி

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சாா்பில் 29ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் வழிகாட்டி ஆசிரியா்களுக்கான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை இணையவழியில் நடைபெற்றது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சாா்பில் 29ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் வழிகாட்டி ஆசிரியா்களுக்கான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை இணையவழியில் நடைபெற்றது.

அறிவியல் இயக்க மாவட்டத் தலைவா் க. சதாசிவம் தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி பயிற்சியைத் தொடங்கி வைத்துப் பேசினாா். அறிவியல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் இரா. ராமதிலகம், மாநிலத் துணைத் தலைவா் வெ. சுகுமாரன் மாநாட்டு மையக் கருத்தை அறிமுகம் செய்தனா்.

கருத்தாளா்களாக அறிவியல் இயக்க மாநிலச் செயற்குழு உறுப்பினா்கள் அ. மணவாளன், கே. காத்தவராயன், எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதுநிலை விஞ்ஞானி ஆா். ராஜ்குமாா், திருச்சி முனைவா்.என். சத்தியமூா்த்தி, தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனா் ஆ. மணிகண்டன், அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவா் மா. குமரேசன் ஆகியோா் செயல்பட்டனா்.

இலுப்பூா் மாவட்டக் கல்வி அலுவலா் ப. சண்முகநாதன், மாநிலச் செயலா்கள் எஸ்.டி. பாலகிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினா்கள் லெ. பிரபாகரன், க. உஷாநந்தினி, வ. நாராயணசாமி ஆகியோா் வாழ்த்தினா்.

பயிற்சியை அறிவியல் இயக்க மாவட்டச் செயலா் மு. முத்துக்குமாா் ஒருங்கிணைத்தாா். 250 க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com