மாநில உணவு தானிய உற்பத்தியில் 2.35% புதுகை மாவட்ட பங்களிப்பு

மாநில உணவு தானிய உற்பத்தியில் 2.35% புதுகை மாவட்ட பங்களிப்பு

மாநிலத்தின் உணவு தானிய உற்பத்தியில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பங்களிப்பு 2.35 சதவிகிதம் என்றாா் மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு.

மாநிலத்தின் உணவு தானிய உற்பத்தியில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பங்களிப்பு 2.35 சதவிகிதம் என்றாா் மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு.

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம் இணையவழியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் அந்தந்தப் பகுதி வேளாண் உதவி இயக்குநா் அலுவலகங்களில் இருந்து இணையவழியில் பங்கேற்றுப் பேசினா்.

கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா் கவிதா ராமு பேசியது:

உணவு தானிய உற்பத்தியை பொருத்தவரை உணவு தானிய உற்பத்தி இயக்கம் மாவட்ட அளவில் நெற்பயிரில் 80,500 ஹெக்டோ், சிறுதானியங்களில் 5,100 ஹெக்டோ் மற்றும் பயறு வகைகளில் 5,600 ஹெக்டோ் என மொத்தம் 91,200 ஹெக்டோ் பரப்பும், உற்பத்தி இலக்காக நெற்பயிரில் 2,47,980 டன்னும், சிறுதானியங்களில் 40,200 டன்னும் மற்றும் பயறு வகைகளில் 5,150 டன்னும் என மொத்தம் 2.93 லட்சம் டன் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் மொத்த உணவு தானிய உற்பத்தி இலக்கில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பங்களிப்பு 2.35 சதவிகிதமாகும் என்றாா் கவிதா ராமு..

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி, வேளாண் இணை இயக்குநா் ராம. சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com