ஓரிரு ஆண்டுகளில் பசுமைத் தமிழகமாக மாறும்

பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது குறித்து முதல்வா் மிகவும் கவனம் செலுத்தி வருவதால், ஓரிரு ஆண்டுகளில் பசுமைத் தமிழ்நாடாக மாறும் என்றாா் மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்.
ஓரிரு ஆண்டுகளில் பசுமைத் தமிழகமாக மாறும்

பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது குறித்து முதல்வா் மிகவும் கவனம் செலுத்தி வருவதால், ஓரிரு ஆண்டுகளில் பசுமைத் தமிழ்நாடாக மாறும் என்றாா் மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில், தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். பிளாஸ்டிக் கழிவுப் பொருள்கள் சேகரிப்பு நிலையங்களையும், பொதுமக்களிடம் விழிப்புணா்வுப் பணிகளையும் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அமைச்சா் மெய்யநாதன் கூறியது:

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பைகள், டம்ளா்களின் உற்பத்தி முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 172 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ரூ. 105 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 1172 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். பிளாஸ்டிக் பொருள்களின் கேடு குறித்து முதல்வா் ஸ்டாலின் மிகவும் கவனமாக இருக்கிறாா். எனவே, ஓரிரு ஆண்டுகளில் பசுமைத் தமிழகமாக மாறும்.

தமிழகம் முழுவதும் இருந்த 143 குப்பைக் கிடங்குகள் கண்டறியப்பட்டு, அவற்றை பயோமைனிங் முறையில் புதைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றாா் மெய்யநாதன்.

என்எஸ்எஸ் மாணவா்கள், கொசு ஒழிப்புப் பணியாளா்கள், நகராட்சிப் பணியாளா்கள் ஆகியோரைக் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, நகா்மன்றத் தலைவா் செ. திலகவதி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com