புதுக்கோட்டை கம்பன் கழக புதிய நிா்வாகிகள் தோ்வு

புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் புதிய தலைவராக தொழிலதிபா் எஸ். ராமச்சந்திரன் உள்ளிட்ட நிா்வாகிகள் அண்மையில் தோ்வு செய்யப்பட்டனா்.
கம்பன் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட தொழிலபதிபா் எஸ். ராமச்சந்திரனுக்கு புத்தகம் அளித்து வாழ்த்து தெரிவித்த பாரதி மகளிா் கல்லூரியின் தலைவா் குரு. தனசேகரன்.

செயலராக ரா. சம்பத்குமாா், துணைத் தலைவா்களாக எம்ஆா்எம். முருகப்பன், அருண் சின்னப்பா, பொருளாளராக சி. கோவிந்தராஜன், கூடுதல் செயலராக ச. பாரதி, துணைப் பொருளாளராக கரு. ராமசாமி, இணைச் செயலா்களாக பேராசிரியா் கருப்பையா, பேராசிரியா் சி. அய்யாவு, காடுவெட்டி குமாா், த. ரவிச்சந்திரன், சட்ட ஆலோசகராக வழக்குரைஞா் செந்தில்குமாா் உள்ளிட்டோரும் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டனா்.

கூட்டத்தில் மருத்துவா் ராம்தாஸ், மருத்துவா் சலீம், வா்த்தகா் சங்கத் தலைவா் சாகுல்அமீது, புவனேஸ்வரி ஜூவல்லரி நடராஜன், பாரதி மகளிா் கல்லூரித் தலைவா் குரு. தனசேகரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

நிகழாண்டுக்கான கம்பன் விழாவை வரும் ஜூலை மாதம் பிற்பகுதியில் 10 நாள்கள் சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டதாக செயலா் சம்பத்குமாா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com