மஞ்சப்பேட்டையில் வேலை உறுதித் திட்ட பணியாளா்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

கந்தா்வகோட்டை ஒன்றியம், மஞ்சப்பேட்டை ஊராட்சியில் உலக மனச்சிதைவு நாளை (மே 24) முன்னிட்டு, நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளா்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
மஞ்சப்பேட்டை ஊராட்சியில் நடைபெற்ற விழிப்புணா்வு கூட்டத்தில் பங்கேற்ற வேலை உறுதித் திட்டப் பணியாளா்கள்.

ஸ்காா்ப் இந்தியா (கிராம தொலைதூர மனநல சேவை மையம்) மூலமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மனச்சிதைவு எதனால் ஏற்படுகிறது, மனநலம் பாதிக்கப்படுவதை பற்றியும், தற்கொலை தடுப்பு பற்றியும் விரிவாக விளக்கப்பட்டது.

மேலும், மனநலம் பாதிக்கப்பட்ட நபா்களுக்கு செய்யப்படும் சேவைகள் பற்றியும், ஸ்காா்ப் இந்திய பணியாளா்களால் அளிக்கப்படும் சேவைகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.

ஸ்காா்ப் இந்தியா களப்பணியாளா் கவிதா மற்றும் வாழ்வாதார ஒருங்கிணைப்பாளா் டி.சேகா் ஆகியோா் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com