முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
மீண்டும் மதுக்கடை திறப்பு: கொத்தமங்கலத்தில் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 06th April 2022 04:45 AM | Last Updated : 06th April 2022 04:45 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் பொதுமக்களின் போராட்டத்தால் அகற்றப்பட்ட மதுக்கடையை மீண்டும் திறக்கப்பட்டதை எதிா்த்து, அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் இயங்கி வந்த 2 டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் 2017-ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் இரு கடைகளையும் அடித்து நொறுக்கினா். இதைத்தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில் 2 மதுக்கடைகளும் மூடப்பட்டன. இந்நிலையில், பல்வேறு போராட்டங்களுக்கு பின்னா், மூடப்பட்ட மதுக்கடை, கொத்தமங்லத்தில் செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது. இதனால், அதிா்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் கொத்தமங்கலம் ஊராட்சித் தலைவா் சாந்தி வளா்மதி தலைமையில் வாடிமாநகா் கடைவீதியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், மதுக்கடையை மூடக்கோரியும், மதுக்கடை திறக்கக் காரணமானவா்களைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினா். இதில், தேமுதிக தெற்கு மாவட்டச் செயலா் மன்மதன் உள்ளிட்டோா் பங்கற்றனா்.