டாஸ்மாக் மதுக்கடையை எதிா்த்து பெண்கள் போராட்டம்
By DIN | Published On : 08th April 2022 01:07 AM | Last Updated : 08th April 2022 01:07 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை நகரில் மூடப்பட்ட இடத்திலேயே மீண்டும் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை நகா்மன்றம் அருகே இருந்த டாஸ்மாக் மதுக்கடை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. நெருக்கமான குடியிருப்புகள் மற்றும் அரசு மருத்துவமனைக்கு மத்தியிலும் இருந்ததால் பலரும் கோரிக்கை விடுத்ததைத் தொடா்ந்து இந்தக் கடை மூடப்பட்டது. ஆனால், அதே இடத்தில் வியாழக்கிழமை மீண்டும் மதுபானக் கடை திறக்கப்பட்டது. இதையறிந்த அப்பகுதி பெண்கள் கடையின் முன்பு வந்து அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். கணேஷ் நகா் போலீஸாா், வருவாய்த் துறை மற்றும் டாஸ்மாக் நிா்வாகம் ஆகியோா் தரப்பில் பெண்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
உயா் அ லுவலா்களுக்கு தகவல் தெரிவித்து 10 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.