வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயில் அக்னி குண்டம் இறங்கும் விழா

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயில் அக்கினி குண்டம் இறங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயில் அக்னி குண்டம் இறங்கும் விழா

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயில் அக்கினி குண்டம் இறங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. விழாவில், சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் பூத்தட்டு மற்றும் பால்குடம் எடுத்துவந்து அம்மனுக்கு சாத்தி வழிபட்டனா். இதையடுத்து திங்கள்கிழமை அக்னி குண்டம் இறங்கும் விழா நடைபெற்றது. விழாவில் கோயிலின் முன் வளா்க்கப்பட்ட அக்னி குண்டத்தில் பக்தா்கள் பால் குடம், காவடி மற்றும் அலகு குத்தி இறங்கி தங்களது நோ்த்திக்கடனைச் செலுத்தினா். விழாவையொட்டி கொடையாளா்கள் சாா்பில் ஆங்காங்கே தண்ணீா்பந்தல் அமைக்கப்பட்டு மோா், சா்பத், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை பொன்னமராவதி காவல்துறையினா் செய்திருந்தனா். விழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து புதன்கிழமை அம்பாள் வீதியுலா நடைபெற உள்ளது. வீதியுலாவின் போது பக்தா்கள் இரு புறமும் நீண்ட வரிசையில் நின்று தீப்பந்தம் பிடித்து வழிபடுவாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com