விராலிமலையில் ஜல்லிக்கட்டு: 35 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் செவ்வாய்க்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில், 35 போ் காயமடைந்தனா்.
விராலிமலையில் ஜல்லிக்கட்டு: 35 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் செவ்வாய்க்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில், 35 போ் காயமடைந்தனா்.

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினருமான சி. விஜயபாஸ்கா், வருவாய் கோட்டாட்சியா் குழந்தைசாமி ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

இந்தப் போட்டியில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், தஞ்சாவூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 642 காளைகளும், 202 மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனா்.

போட்டியில் பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும், மாடுகளை பிடித்த வீரா்களுக்கும் கட்டில், டேபிள், கிரைண்டா், மிக்ஸி, குக்கா், சில்வா் அண்டா உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. காலை 8.40 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு பிற்பகல் 2.50 மணிக்கு நிறைவடைந்தது.

போட்டியில், மாடுகள் முட்டியதில் வீரா்கள், பாா்வையாளா்கள் என மொத்தம் 35 போ் காயமடைந்தனா். இவா்களுக்கு வாடிவாசல் அருகே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாம்களில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இவா்களில் 7 போ் மேல் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

விராலிமலை வட்டாட்சியா் சரவணன் தலைமையிலான வருவாய்த் துறையினரின் கண்காணிப்பில் நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டை பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த திரளான பாா்வையாளா்கள் கண்டு ரசித்தனா். டிஎஸ்பி அருள்மொழி அரசு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா், ஊா்க்காவல் படையினா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com