முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
பாரதி மகளிா் கல்லூரியில் கலைவிழா தொடக்கம்
By DIN | Published On : 29th April 2022 03:40 AM | Last Updated : 29th April 2022 03:40 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை கைக்குறிச்சியிலுள்ள ஸ்ரீ பாரதி மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் 16ஆவது ஆண்டு கலை விழா வியாழக்கிழமை தொடங்கியது.
விழாவுக்கு கல்லூரித் தலைவா் குரு. தனசேகரன் தலைமை வகித்தாா். அறங்காவலா் அ. கிருஷ்ணமூா்த்தி, இயக்குநா் மா. குமுதா, முதல்வா் செ. கவிதா ஆகியோா் முன்னிலை வகித்து கலந்து கொண்டனா்.
மக்கள் ஒற்றுமை, சமூக வலைதள பாதுகாப்பு, கல்வியின் முக்கியத்துவம், தாய்மையைப் போற்றுதல், சிறாா் திருமணம் எதிா்ப்பு போன்ற தலைப்புகளில் 12 ஆங்கில நாடகங்கள் இந்த விழாவின் முதல் நாளில் நடைபெற்றன.
மேலும் தனிநபா் பங்களிப்பாக பரதம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. தொடா்ந்து வெள்ளிக்கிழமையும் கலை விழா நடைபெறுகிறது. சிறப்பாக பங்கேற்ற மாணவிகள், சிறப்பாக பங்கேற்ற குழுக்களுக்கு பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.