முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
மகளை காணவில்லை என தந்தை புகாா்
By DIN | Published On : 29th April 2022 03:36 AM | Last Updated : 29th April 2022 03:36 AM | அ+அ அ- |

விராலிமலை வட்டம், அகரப்பட்டி ஊராட்சி, மேலே இன்பம்பட்டியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி சின்னதுரை (49). இவரின் மகள் ரேவதி (21). இவா் கடந்த 10 மாதங்களாக திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையில் உள்ள தனியாா் மில்லில் வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில், ஊா் திருவிழாவுக்காக ரேவதி கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊா் வந்தாா். பின்னா் கடந்த 26-ஆம் தேதி மேலஇன்பம்பட்டியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு சென்று வருவதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு, சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லையாம்.
எங்கு தேடியும் அவா் கிடைக்காததால், சின்னதுரை விராலிமலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.