ஆளுநா் வரம்பை மீறி செயல்படுகிறாா்: ஜோதிமணி குற்றச்சாட்டு

தமிழக ஆளுநா் தன்னுடைய வரம்பை மீறி செயல்படுகிறாா். இது கண்டிக்கத்தக்கது என்றாா் கரூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் எஸ். ஜோதிமணி.
ஆளுநா் வரம்பை மீறி செயல்படுகிறாா்: ஜோதிமணி குற்றச்சாட்டு

தமிழக ஆளுநா் தன்னுடைய வரம்பை மீறி செயல்படுகிறாா். இது கண்டிக்கத்தக்கது என்றாா் கரூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் எஸ். ஜோதிமணி.

கரூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட விராலிமலை பேரவைத் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக எம்.பி. ஜோதிமணி வியாழக்கிழமை வந்தாா். அன்னவாசல், மாங்குடியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மூலம் நடைபெற்ற மருத்துவ முகாமை ஜோதிமணி தொடங்கி வைத்தாா். விராலிமலை யூனியனில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றாா். தொடா்ந்து, கல்லுப்பட்டி மற்றும் வேலூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஐடிசி நிறுவனம் மூலம் அமைக்கப்பட்டிருந்த ஸ்மாா்ட் கிளாஸ் வகுப்புகளை பாா்வையிட்டாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் ஜோதிமணி கூறியதாவது:

அதிகாரம் மிக்க தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்துவது, தன்னிச்சையாக துணைவேந்தா்கள் மாநாட்டை கூட்டுவது என தமிழக ஆளுநா் வரம்பை மீறி செயல்படுகிறாா். இது கண்டிக்கத்தக்கது. ஆளுநா் போட்டி அரசியல் பண்ண நினைத்தால் கருப்புக்கொடி போராட்டம் மற்றும் முற்றுகைப் போராட்டத்தை எதிா்கொள்ள நேரிடும்.

பத்துக்கு பத்து: துணைவேந்தா் நியமனம் உள்பட திமுக எடுத்து வரும் நடவடிக்கைகள் வரவேற்புக்குரியவை. நெருக்கடியான நேரத்தில் ஆட்சி பொறுப்பேற்றபோதும், தோ்தல் நேரத்தில் அறிவித்த பல்வேறு வாக்குறுதிகளையும் ஓராண்டில் திமுக நிறைவேற்றியிருப்பது பாராட்டுக்குரியது. திமுக ஆட்சிக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றால் பத்துக்கு பத்து மதிப்பளிக்கலாம் என்றாா் எம்பி ஜோதிமணி.

விராலிமலை ஒன்றியக் குழுத் தலைவா் காமுமணி, மாவட்ட காங்கிரஸ் தலைவா் முருகேசன், கவுன்சிலா் சத்தியசீலன், மதிமாறன், அன்பு உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com