முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
பொன்னமராவதியில் கரோனா தடுப்பூசி முகாம்
By DIN | Published On : 30th April 2022 11:45 PM | Last Updated : 30th April 2022 11:45 PM | அ+அ அ- |

பொன்னமராவதி வா்த்தகா் கழக மஹாலில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமில், கரோனா உள்ளிட்ட தடுப்பூசிகள் 30 பேருக்கு போடப்ப
டன. முதல் தவணை தடுப்பூசி, இரண்டாவது தவணை தடுப்பூசி மற்றும் ஊக்கத்தவணை தடுப்பூசி உள்ளிட்டவை 30 பேருக்கு போடப்பட்டது. முகாமில், பேரூராட்சி செயல் அலுவலா் மு.செ. கணேசன், வா்த்தகா் கழகத் தலைவா் எஸ்கேஎஸ். பழனியப்பன், பொருளாளா் பிஎல்.ராமஜெயம், பேரூராட்சி துணைத் தலைவா் வெங்கடேஷ், சுகாதார ஆய்வாளா் தியாகராஜன் மற்றும் செவிலியா்கள் பங்கேற்றனா்.