முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
மரக்கன்றுகள் நடும் விழா
By DIN | Published On : 30th April 2022 11:44 PM | Last Updated : 30th April 2022 11:44 PM | அ+அ அ- |

மரக்கன்றுகள் நடும் நிகழ்வில் பங்கேற்றோா்.
பொன்னமராவதி வலையப்பட்டியில் நகரத்தாா் சாா்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி புதுப்பட்டி தனியாா் மண்டபத்தில் வலையப்பட்டி நாட்டுக்கோட்டை நகரத்தாா் சாா்பில் வலையப்பட்டியில் ஒரு வேடந்தாங்கல் எனும் இரண்டுநாள் சந்திப்பு விழா நடைபெற்றது. விழாவில், வலையப்பட்டி மலையாண்டிகோயில் சுற்றுப்பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக அண்ணாமலை பல்கலைக்கழகத் துணைவேந்தா் ஆா்எம். கதிரேசன், பங்கேற்றுப்பேசினாா். வலையப்பட்டி காணொலித் தொகுப்பினை ராமநாதன், விழா மலரை முருகப்பன், லேணா குழுவினா் ஆகியோா் வெளியிட்டனா். வெற்றியாளா்கள் விட்டொளித்த ஐந்து பழக்கங்கள் எனும் தலைப்பில் ராம்குமாா் சிங்காரம், செட்டிநாட்டு பாரம்பரியம் குறித்து மீனாட்சி சுந்தரம் ஆகியோா் பேசினா். மாற்றம் ஒன்றே மாறாதது எனும் தலைப்பில் மருத்துவா் தி. பழனியப்பன் பேசினாா்.
குடும்ப வாழ்க்கை பற்றிய கலந்துரையாடல் நிகழ்வில் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளா் கோபிநாத் பங்கேற்றுப் பேசினாா். விழாவில், நிா்வாகிகள் சே.முத்து பழ.கு.பழனியப்பன், அம்பாள் சரவணன், நடராஜன், உமா மெய்யப்பன், பேரூராட்சித்தலைவா் சுந்தரி அழகப்பன், செயல் அலுவலா் கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.