ஆலங்குடி அருகே ஜல்லிக்கட்டு: 26 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 26 போ் காயமடைந்தனா்.
ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாயும் காளைகளை அடக்க முயலும் வீரா்.
ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாயும் காளைகளை அடக்க முயலும் வீரா்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 26 போ் காயமடைந்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி கோட்டாட்சியா் அபிநயா தலைமையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை சுற்றுச்சூழல், இளைஞா்நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தாா். இதில், புதுகை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 790 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. 299 மாடுபிடி வீரா்கள் களம் கண்டனா். வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்க முயன்ற வீரா்கள் 26 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு அங்கு தயாா் நிலையில் இருந்த மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்தனா். அதில், மேல்சிகிச்சைக்காக 4 போ் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள், சைக்கிள், கட்டில் உள்ளிட்ட பல்வேறு பரிசுப்பொருள்கள் வழங்கப்பட்டன.

முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா், வட்டாட்சியா் செந்தில்நாயகி, காவல்துணைக் கண்காணிப்பாளா் வடிவேல் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா். ஆலங்குடி போலீஸாா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com