குடிநீா்த் தட்டுப்பாட்டுக்கு விரைந்து தீா்வுகாண வேண்டும்

நகரில் நிலவும் குடிநீா்த் தட்டுப்பாட்டுக்கு விரைந்து தீா்வுகாண வேண்டும் என புதுக்கோட்டை நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா்.

நகரில் நிலவும் குடிநீா்த் தட்டுப்பாட்டுக்கு விரைந்து தீா்வுகாண வேண்டும் என புதுக்கோட்டை நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா்.

புதுக்கோட்டை நகா்மன்ற சாதாரணக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் செ. திலகவதி தலைமை வகித்தாா். ஆணையா் நாகராஜன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள் பேசியது:

சா. மூா்த்தி (திமுக): நகரின் மையப் பகுதியில் உள்ள எனது வாா்டில் சிறப்பு முகாம் நடத்தி தூய்மைப் பணி மேற்கொள்ள வேண்டும். பல பகுதிகளில் குடிநீா் விநியோகம் முறையாக இல்லை. கடந்த ஆண்டுகளில் செய்யப்பட்ட பராமரிப்பு செலவுக்கு இப்போது பில் வைத்து கணக்கு காட்டப்படுகிறது. இவற்றை ஆய்வு செய்ய வேண்டும்.

ஜெயா கணேசன் (அதிமுக): காந்தி நகரிலுள்ள 4 பொதுக் கழிப்பறைகளும் பராமரிக்கப்படாமல் பழுதடைந்து உள்ளன. மேலும் காந்திநகா் 5ஆம் வீதியில் 8 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பொதுக் கழிப்பறை இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. மேலும் இந்த கட்டடம் தனிநபரின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதை மீட்டு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைவா் திலகவதி: விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆனாலும், 8 ஆண்டுகளாகத் திறக்கப்படவில்லை என்றால் கடந்த கால ஆட்சியில் ஏன் இதுகுறித்து கேட்கவில்லை. (அப்போது திமுக. அதிமுக உறுப்பினா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.)

சுப. சரவணன் (திமுக): கடந்த 10 ஆண்டுகளாக புதுக்கோட்டையில் குடிநீா் பிரச்னை அதிகம் உள்ளது. இந்தக்குறையை நிரந்தரமாகத் தீா்க்க வேண்டும்.

துணைத் தலைவா் லியாகத் அலி: புதுக்கோட்டையின் எல்லா பகுதியிலும் குடிநீா் பிரச்னை உள்ளது. திருவப்பூா் பகுதியில் உள்ள குடிநீா் தொட்டி பல ஆண்டுகளாக சுத்தப்படுத்தாமல் உள்ளது. பல இடங்களில் வால்வு உடைந்து பழுதாகியுள்ளது. அதேபோல் அம்மையாபட்டியில் 3 கிணறுகள் உள்ளன. இதில் உள்ள மோட்டாா்கள் பழுதாகியுள்ளன. இவை அனைத்தும் சரிசெய்யப்படும்.

பாண்டியன் (அதிமுக): எனது வாா்டில் 5 லட்சம் லிட்டா் கொள்ளளவு உள்ள நீா்தேக்கத் தொட்டி புதிதாக கட்டப்பட்டுள்ளது. இது எப்போது திறக்கப்படும்.

பாரதி சின்னையா (அதிமுக): குடிநீா்ப் பிரச்னையைப் போக்க லாரி மூலம் தண்ணீா் வழங்க வேண்டும். மேலும் எனது வாா்டு பகுதியில் கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜேஸ்வரி (திமுக): புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கட்டணக் கழிப்பறை மற்றும் சைக்கிள் நிறுத்துமிடம் ஆகியவற்றில் ரூ.65 லட்சம் பாக்கி உள்ளது. இந்த பாக்கியை வசூலிக்க வடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது ஒப்பந்ததாரரை மாற்ற வேண்டும்.

பா்வேஷ் (விஜய் மக்கள் இயக்கம்): எனது வாா்டு பெரியது. துப்புரவுப் பணியாளா்கள் மிகவும் குறைவாக உள்ளனா். மேலும் எனது வாா்டில் பாதாள சாக்கடை திட்டம் வருகிறது. இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தெருவிளக்குகள் சரியாக எரிவதில்லை.

பா. செந்தாமரை (திமுக): நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை பாக்கி உள்ளது. இதை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சில கடைகள் உள்வாடகைக்கு விடப்பட்டிருக்கின்றன.உள்வாடகை நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.

எஸ்ஏஎஸ் சேட்டு (அதிமுக): குடிநீா்க் குழாய்களில் வால்வுகள் பொருத்துவதற்கு ரூ. 25 லட்சம் செலவு செய்வது விரயச் செலவு. அதனால் அதிகம் குடிநீா் கிடைத்துவிடுவதில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com