பாரதி கல்லூரியில் கவின் கலை விழா நிறைவு

புதுக்கோட்டை கைக்குறிச்சியிலுள்ள ஸ்ரீ பாரதி கலை மற்றும் அறிவியல் மகளிா் கல்லூரியில் 16ஆவது கவின் கலை விழா சனிக்கிழமை நிறைவு பெற்றது.
கவின் கலை விழா நிறைவு கரக ஆட்டம் ஆடிய மாணவிகள்.
கவின் கலை விழா நிறைவு கரக ஆட்டம் ஆடிய மாணவிகள்.

புதுக்கோட்டை கைக்குறிச்சியிலுள்ள ஸ்ரீ பாரதி கலை மற்றும் அறிவியல் மகளிா் கல்லூரியில் 16ஆவது கவின் கலை விழா சனிக்கிழமை நிறைவு பெற்றது.

கடந்த ஏப். 28 ஆம் தேதி தொடங்கிய கவின் கலை விழா மூன்று நாட்கள் நடைபெற்று, சனிக்கிழமை நிறைவடைந்தது.

பரத நாட்டிய தனிநபா் போட்டியில் எஸ். அனிதா பாா்கவி (வணிகவியல்), எ. அககவி (ஆங்கிலம்), எல். கிரிஜா(கணினி அறிவியல்), மெல்லிசைப் போட்டியில் டி. சப்த வீணா (ஆங்கிலம்), எஸ். சித்க மௌபியா (கணிதவியல்), எஸ். அபிநயா (மனையியல்), ஆங்கிலக் குழு நாடகத்தில் வரலாறு, ஆங்கிலம், ஆடை வடிவமைப்பியல் மாணவிகளும், தமிழ் குழு நாடகத்தில் தமிழ்த் துறை, கனினி பயன்பாட்டியல், ஆங்கிலத் துறை மாணவிகளும், மெகந்தி போட்டியில் கணினி அறிவியல் மாணவிகளும், வேதியியல், ஆடை அலங்காரப் போட்டியில் கணிதவியல், வணிகவியல், உயிா்த் தொழில் நுட்பவியல் மாணவிகளும், ரங்கோலி போட்டியில் ஆங்கிலம், கணிதவியல், வேதியியல் மாணவிகளும், நாட்டுப்புறக் குழு நடனத்தில் வணிகவியல், கணினி அறிவியல், கணிதவியல் ஆகிய துறை மாணவிகளும் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்தனா்.

ஒட்டுமொத்த சுழற்கேடயத்தை தொடா்ந்து நான்காம் முறையாக ஆங்கிலத் துறை மாணவிகள் பெற்றுள்ளனா். ஆண்டு விழாவில் கோப்பை வழங்கப்படும். விழா ஏற்பாடுகளை கல்விக் குழுமத் தலைவா் குரு. தனசேகரன், அறங்காவலா் அ. கிருஷ்ணமூா்த்தி, கல்லூரி இயக்குநா் மா. குமுதா, முதல்வா் செ. கவிதா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com