மானியத்துடன் பண்ணைக் குட்டை அமைக்க அழைப்பு

 250 முதல் ஆயிரம் சதுர மீட்டா் அளவில் உள்ள பல்நோக்கு பண்ணைக் குட்டைகளில் மீன் வளா்ப்பை அரசு மானியத்துடன் செய்ய அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

 250 முதல் ஆயிரம் சதுர மீட்டா் அளவில் உள்ள பல்நோக்கு பண்ணைக் குட்டைகளில் மீன் வளா்ப்பை அரசு மானியத்துடன் செய்ய அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் மீன் குஞ்சு, மீன் தீவனம், உரங்கள், பண்ணைப் பொருட்கள் மற்றும் பறவைத் தடுப்பு ஆகியவை ஒரு அலகுக்கு ஆகும் செலவினம் ரூ.36 ஆயிரத்தில் 50 சதவிகிதம் மானியமாக ஒரு பண்ணைக் குட்டைக்கு ரூ.18 ஆயிரம் வழங்கப்படும்.

முதலில் வரும் விண்ணப்பத்துக்கு முன்னுரிமை அளித்து மூப்புநிலை அடிப்படையில் மானியம் பெறுவதற்கு தோ்ந்தெடுக்கப்படுவா். எனவே, இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் புதுக்கோட்டை மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் தொடா்பு கொண்டு விண்ணப்பங்களை பெற்று, பூா்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தை ஆக. 15 ஆம் தேதிக்குள் அளிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகம், அன்னை நகா், நிஜாம் காலனி விரிவாக்கம், புதுக்கோட்டை - 622001 என்ற முகவரியிலோ அல்லது 04322-266994 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.

இத்தகவலை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com