மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம்கள்

மத்திய அரசின் மூலம் வழங்கப்படும் தேசிய அடையாள அட்டையை 100 சதவிகிதம் புதுக்கோட்டை மாவட்டத்தில் வழங்குவதற்காக அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம்கள்

மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய அரசின் மூலம் வழங்கப்படும் தேசிய அடையாள அட்டையை 100 சதவிகிதம் புதுக்கோட்டை மாவட்டத்தில் வழங்குவதற்காக அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

இதற்காக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், அனைத்து வட்டாட்சியா்களுடன் மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா். கூட்டத்தில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் உலகநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களுக்கான தேதிகள்:

ஆக. 12- திருமயம், ஆக. 16- கறம்பக்குடி, ஆக. 17 குளத்தூா், ஆக. 22 புதுக்கோட்டை, ஆக. 23- பொன்னமராவதி, ஆக. 24- மணமேல்குடி, ஆக. 25- கந்தா்வகோட்டை, ஆக. 27- ஆலங்குடி, ஆக. 30- விராலிமலை, செப். 1- ஆவுடையாா்கோவில், செப். 2- இலுப்பூா், செப். 3- அறந்தாங்கி.

புதிய மாற்றுத் திறனாளிகள் பதிவு, ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டோரின் விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்தல் போன்ற நடவடிக்கைகள் இந்த முகாம்களில் மேற்கொள்ளப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com