சுந்திர தின விழா ஏற்பாடுகள் ஆலோசனை

நாட்டின் 75ஆவது விடுதலைத் திருநாள் அமுதப் பெருவிழாவை புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கொண்டாடுவது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு ஆலோசனை மேற்கொண்டாா்.
கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு.
கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு.

நாட்டின் 75ஆவது விடுதலைத் திருநாள் அமுதப் பெருவிழாவை புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கொண்டாடுவது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு, காணொலிக் காட்சி மூலம் ஊராட்சித் தலைவா்களுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆட்சியருடன் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி, மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் திட்ட இயக்குநா் ரேவதி, ஊராட்சிகள் உதவி இயக்குநா் பழனிச்சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அந்தந்தப் பகுதி வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஊராட்சித் தலைவா்கள் காணொலிக் காட்சி மூலம் இணைந்தனா்.

அனைத்து ஊராட்சி அலுவலகங்களிலும் தோ்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சித் தலைவா்கள் கொடியேற்றுவதை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும். ஆக. 13,14,15 ஆகிய மூன்று நாள்களில் வீடுகள் தோறும் கொடியேற்றுவதை உறுதி செய்ய ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

கிராமசபைக் கூட்டங்கள்... ஆக. 15 முற்பகல் 11 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 497 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன.

இக் கூட்டங்களில், அந்தந்தப் பகுதி பொதுமக்கள், மகளிா் குழுவினா், தொண்டு நிறுவனத்தினா் உள்ளிட்டோா் திரளாகக் கலந்து கொள்ள ஆட்சியா் அழைப்புவிடுத்துள்ளாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com