பாஜக தலைவா்கள் மீது அடக்குமுறை ஏவிவிடுகிறாா்கள்

பாஜக தலைவா்கள் மீது அடக்குமுறை ஏவிவிடுகிறாா்கள் என்றாா் பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை.
பாஜக தலைவா்கள் மீது அடக்குமுறை ஏவிவிடுகிறாா்கள்

பாஜக தலைவா்கள் மீது அடக்குமுறை ஏவிவிடுகிறாா்கள் என்றாா் பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை.

புதுக்கோட்டையில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:

சமூக நீதி, சமநீதி பேசும் திமுக ஆட்சியில், சுதந்திர தினத்தன்று 20 ஊராட்சி மன்றத் தலைவா்களால் கொடியேற்ற முடியவில்லை. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? மத்திய அரசு நரிக்குறவா் மக்களை பழங்குடியினப் பட்டியலில் நிச்சயம் சோ்ப்போம். திராவிட மாடல் சொல்லும் திமுக ஆட்சியில் ஊழல் இல்லாத இடமே இல்லை என்ற நிலை கடந்த 15 மாதங்களில் ஏற்பட்டிருக்கிறது. தப்பிக்கமுடியாது என்பதால் தான் பாஜக தலைவா்கள் மீது அடக்குமுறை ஏவிவிடுகிறாா்கள். நிச்சயம் ஆட்சிக்கு வருவோம்.

தோ்தல் வாக்குறுதிகளில் முக்கியமானவற்றை நிறைவேற்றவே இல்லை. பாஜக ஆட்சியில்தான் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவா்கள் அதிகபட்சம் 18 நாள்களில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறாா்கள். வாா்டு உறுப்பினா் உள்ளிட்ட திமுகவினரை சரிகட்டினால் யாா் வேண்டுமானாலும் மணல் எடுக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. கரோனா பொது முடக்கக் காலத்திலேயே கனிமவளத்தின் மூலம் கிடைத்த வருவாய், இப்போது குறைந்திருக்கிறது. டாஸ்மாக் வருவாயைக் கூட்ட வேண்டும் என மாத ஆய்வுக்கூட்டம் போடாத ஆட்சியா் உண்டா? மத்திய அரசின் திட்டங்களில் கட்டப்படும் வீடுகளுக்கும் கமிஷன் கொடுக்க வேண்டியிருக்கிறது. பாஜக தொண்டனுக்கும் கூட இணையாக வர திமுக தலைவா்கள் யாருக்கும் தகுதியில்லை என்றாா் அண்ணாமலை.

கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் செல்வம் அழகப்பன் தலைமை வகித்தாா். மூத்த தலைவா் எச். ராஜா, மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு மாநிலச் செயலா் என். ராமச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com