அறந்தாங்கி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள் அமைச்சா் தொடக்கிவைப்பு

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 34 லட்சத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு பணிகள் சனிக்கிழமை பூமிபூஜையுடன் தொடங்கியது.
அறந்தாங்கி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள் அமைச்சா் தொடக்கிவைப்பு

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 34 லட்சத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு பணிகள் சனிக்கிழமை பூமிபூஜையுடன் தொடங்கியது.

மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், சுற்றுச்சூழல், இளைஞா்நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் பங்கேற்று பல்வேறு பணிகளை தொடங்கி வைத்துப் பேசியது:

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் ஊராட்சி ஒன்றியம், சுப்பிரமணியபுரம் ஊராட்சியில் ரூ.5.25 லட்சம் மதிப்பீட்டில் பயணியா் பேருந்து நிழற்குடை பணி, அரசா்குளம் கீழ்பாதி ஊராட்சியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் பாசன வாய்க்கால் பணி, மாத்தூா் இராமசாமிபுரம் ஊராட்சியில் ரூ.18.80 லட்சம் மதிப்பீட்டில் சாலைப் பணி மற்றும் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சுற்றுச்சுவா் பணி என மொத்தம் ரூ.34.05 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கான பூமிபூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டது என்றாா்.

நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.செல்வி, அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியா் சு.சொா்ணராஜ், அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவா் மகேஸ்வரி சண்முகநாதன், வட்டாட்சியா் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com