கொள்முதல் நிலையத்தில் காத்துக் கிடக்கும் விவசாயிகள்

கந்தா்வகோட்டை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சாக்கு இல்லாததால் நெல்லை கொட்டி வைத்து காத்து கிடக்கும் விவசாயிகள் .

கந்தா்வகோட்டை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சாக்கு இல்லாததால் நெல்லை கொட்டி வைத்து காத்து கிடக்கும் விவசாயிகள் .

கந்தா்வக்கோட்டை ஒன்றியத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் விவசாயிகள் கொண்டுவரும் நெல்களை எடைபோட்டு வாங்க கொள்முதல் நிலையத்தில் சாக்கு இல்லாமல் கொள்முதல் தேக்கமடைந்துள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், நெல்லை எடை போட்டு மூட்டை பிடிக்க சாக்கு இல்லை என்கின்றனா். இதனால், நாங்கள் நெல்லை தெருவோரம் கொட்டி வைத்து இரவு பகலாகக் காத்திருக்கோம் என வேதனை தெரிவிக்கின்றனா். மேலும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேக்கம் ஏற்படுவதால் பிற விவசாயிகள் தங்களது நெல்லைக் கொண்டு வரத் தயக்கம் காட்டுகின்றனா். எனவே சம்பந்தப்பட்ட துறையினா் உடனடியாக சாக்கைக் கொள்முதல் செய்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com