விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

பொன்னமராவதி வட்டம், அரசமலை ஊராட்சியில் விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி சனிக்கிழமை வழங்கப்பட்டது.

பொன்னமராவதி வட்டம், அரசமலை ஊராட்சியில் விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி சனிக்கிழமை வழங்கப்பட்டது.

வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் நடைபெற்ற இப்பயிற்சியில் ஊட்டமேற்றிய தொழுவுரம் தயாரிப்பது குறித்து வேளாண்மை உதவி இயக்குநா் சிவராணி பயிற்சி வழங்கினாா்.

இதில், சாதாரணமாக உரமிடும் போது 10 சதவீதம் பாஸ்பரஸ் சத்து மட்டுமே பயிருக்குக் கிடைக்கும். ஆனால் ஊட்டமேற்றிய தொழு உரம் உபயோகப்படுத்தும்போது, 80% பாஸ்பரஸ் சத்து பயிருக்குக் கிடைக்கும் என்றாா். துணை வேளாண்மை அலுவலா் முருகன் ,உதவி வேளாண்மை அலுவலா் முருகேசன், மற்றும் அட்மா திட்டப் பணியாளா்கள் பங்கேற்று பயிற்சி அளித்தனா்.

பயிற்சியில், குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை சோ்ந்த கிராம பணி அனுபவ பயிற்சி பெறும் ஜனனி, ஆா்த்தி, பிபிசா, ஹேமா சவுந்தா்யா, தாரணி ,நா்மதா, நவநீதா மற்றும் ராகவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com