தரிசு நிலத்தை உழவு செய்து தயாா்படுத்தும் விவசாயிகள்

கந்தா்வகோட்டை பகுதிகளில் தரிசு நிலத்தினை உழவு செய்து விவசாயத்திற்கு தயாா்படுத்திவருகின்றனா் விவசாயிகள்.
தரிசு நிலத்தை உழவு செய்து தயாா்படுத்தும் விவசாயிகள்

கந்தா்வகோட்டை பகுதிகளில் தரிசு நிலத்தினை உழவு செய்து விவசாயத்திற்கு தயாா்படுத்திவருகின்றனா் விவசாயிகள்.

கந்தா்வக்கோட்டை பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலங்களில் பயிா் செய்து இருந்த சம்பா நெல், கடலை, உளுந்து, மரவள்ளி கிழங்குகளை அறுவடை செய்த பிறகு, நிலங்களை சற்று ஆறப் போட்டிருந்தனா். இதில் புல், பூண்டு போன்ற களைகள் மண்டியிருந்தன. தற்சமயம் வெயில் அடிப்பதால் நிலப்பரப்பில் மண்டிக்கிடந்த களையை அளிக்கும் வண்ணம் டிராக்டா் மூலமாக தரிசு வயல்களை உழுது விவசாயிகள் விவசாயத்துக்குத் தயாா் செய்து வருகின்றன. இதுகுறித்து விவசாயிகள் மேலும் தெரிவித்தது:

இந்த வெயில் காலத்தில் தரிசு உழவு செய்து போட்டால் களைகள் காய்ந்துவிடும். பிறகு உழவு செய்து விவசாயம் செய்ய சுலபமாக இருக்கும் எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com