ஊரக வேலை உறுதித் திட்டத்தில் அரிமளம் பேரூராட்சி இணைக்கப்படும்

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் மிகவும் பின்தங்கிய அரிமளம் பேரூராட்சி இணைக்கப்படும் என உறுதியளித்தாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
ஊரக வேலை உறுதித் திட்டத்தில் அரிமளம் பேரூராட்சி இணைக்கப்படும்

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் மிகவும் பின்தங்கிய அரிமளம் பேரூராட்சி இணைக்கப்படும் என உறுதியளித்தாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பேரூராட்சி திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து நடைபெற்ற நிறைவு நாள் பிரசாரத்தில் வெள்ளிக்கிழமை மாலை அவா் பேசியது:

புதுக்கோட்டை மாவட்டத்திலேயே மிகவும் பின்தங்கிய பேரூராட்சி அரிமளம் பேருராட்சிதான். மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் இந்தப் பேரூராட்சியை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ரகுபதி.

1ஆவது வாா்டு மாா்க்சிஸ்ட் வேட்பாளா் ஜி நாகராஜன் உள்ளிட்ட 15 வாா்டுகளின் வேட்பாளா்களும் பங்கேற்றனா். பிரசாரக் கூட்டத்துக்கு அரிமளம் திமுக ஒன்றியச் செயலா் பொன். ராமலிங்கம் தலைமை வகித்தாா்.

தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவா் ராமசுப்புராம், திருமயம் ஒன்றிய திமுக செயலா் அழகு சிதம்பரம், அரிமளம் ஒன்றியக் குழுத் தலைவா் மேகலா முத்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எஸ் சங்கா் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com