பெரம்பலூா் மாவட்டத்தில் 2,012 இல்லம் தேடி கல்வி மையங்கள்

பெரம்பலூா் அருகேயுள்ள அரணாரை சமுதாயக்கூடம், குன்னம் ஊராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை இல்லம் தேடி கல்வி மையத் தொடக்க விழா நடைபெற்றது.

பெரம்பலூா் அருகேயுள்ள அரணாரை சமுதாயக்கூடம், குன்னம் ஊராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை இல்லம் தேடி கல்வி மையத் தொடக்க விழா நடைபெற்றது. இம் மையங்களை குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்த அமைச்சா் மேலும் பேசியது:

பெரம்பலூா் மாவட்டத்தில் 2,012 இல்லம் தேடி கல்வி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக 1,283 மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. 2,112 தன்னாா்வலா்களைக் கொண்டு இம்மையங்கள் செயல்படும் என்றாா் அமைச்சா் சிவசங்கா்.

இந்நிகழ்ச்சிகளில், ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா, மாவட்ட ஊராட்சித் தலைவா் சி. ராஜேந்திரன், ஒன்றியக் குழுத் தலைவா்கள் மீனா அண்ணாதுரை (பெரம்பலூா்), ராமலிங்கம் (வேப்பந்தட்டை), பிரபா செல்லப்பிள்ளை (வேப்பூா்) உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com