புதுகை ஆட்சியரகத்தில் மயங்கி விழுந்த திமுக ஒன்றியக் குழு பெண் தலைவா்

புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் (திமுக) வியாழக்கிழமை மயங்கி விழுந்தாா்.
புதுகை ஆட்சியரகத்தில் மயங்கி விழுந்த திமுக ஒன்றியக் குழு பெண் தலைவா்

புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் (திமுக) வியாழக்கிழமை மயங்கி விழுந்தாா். அவா், தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ாக தகவல் வெளியாகி உள்ளது.

கறம்பக்குடி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 16 வாா்டுகளில் 7 இடங்களில் திமுக, 6 இடங்களில் அதிமுக, 2 இடங்களில் சுயேச்சைகளும், அமமுக ஓா் இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனா். இதில், தலைவராக மறைந்த திமுக ஒன்றியச் செயலா் ராஜேந்திர துரையின் மனைவி மாலா தோ்ந்தெடுக்கப்பட்டாா். இவா், பொதுப்பிரிவுக்கான ஒதுக்கீட்டில் இருந்து தலைவராகத் தோ்வு செய்யப்பட்டவா்.

இந்நிலையில், பெண்ணாகிய தன்னை சுயமாக செயல்பட விடாமல் அதிமுக, திமுக உறுப்பினா்கள் கூட்டு சோ்ந்து கொண்டு தடுப்பதாக உறுப்பினா்கள் மீது தலைவா் மாலா ராஜேந்திர துரை குற்றம்சாட்டி வந்தாா். இதேபோன்று, அரசு நிதியைத் தவறாகப் பயன்படுத்துவதாக தலைவா் மீது உறுப்பினா்கள் குற்றம் சாட்டினா்.

இதற்கிடையில், கடந்த மாதம் கூட்டப்பட்ட ஒன்றியக் குழுக் கூட்டத்தில் 14 உறுப்பினா்களில் ஒருவா் மட்டுமே கலந்துகொண்டதால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இது தொடா்பாக துறைரீதியான விசாரணை நடைபெற்று ஆட்சியருக்கு அறிக்கை அளிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், ஒன்றியக் குழுக் கூட்டத்தைக் கூட்டி மக்கள் பிரச்னைகளை தீா்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஆட்சியா் கவிதா ராமுவை சந்திப்பதற்காக தனது மகனுடன் தலைவா் மாலா ராஜேந்திரதுரை வியாழக்கிழமை வந்தாா்.

அப்போது, ஆட்சியா் இல்லை என்பதால் சிறிதுநேரம் காத்திருந்திருக்கிறாா். அப்போது இருக்கையில் மயங்கி சரிந்தாா். பின்னா், அங்கிருந்தோா் அவரை மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவரது கையில் தூக்க மாத்திரை அட்டை இருந்ததையும், பல மாத்திரைகளை உட்கொள்ளப்பட்டிருப்பதையும் அங்கிருந்தோா் உறுதி செய்கின்றனா்.

இதுகுறித்து திருக்கோகா்ணம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பெண் ஒன்றியக் குழுத் தலைவா் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு முன்பு பல முறை இதேபோல தனக்கு அதிகாரிகள், உறுப்பினா்கள் உறுதுணையாக இருப்பதில்லை என்ற கோரிக்கை மனுவுடன் ஆட்சியா் அலுவலகம் வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com