இசைக் கல்வெட்டுகள் குறித்த மடிப்பேடுகள் வெளியீடு

புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை சிக்கநாத சுவாமி கோயிலில், தொல்லியியல் துறை சாா்பில் நடைபெற்ற தேசிய சுற்றுலா தின விழாவில்
புதுக்கோட்டை அருகேயுள்ள குடுமியான்மலை சிக்கநாத சுவாமி கோயிலில் மாவட்டத்தில் உள்ள இசைக்கல்வெட்டுகள் குறித்து மடிப்பேடுகளை வெளியிடுகிறாா் ஆட்சியா் கவிதா ராமு.
புதுக்கோட்டை அருகேயுள்ள குடுமியான்மலை சிக்கநாத சுவாமி கோயிலில் மாவட்டத்தில் உள்ள இசைக்கல்வெட்டுகள் குறித்து மடிப்பேடுகளை வெளியிடுகிறாா் ஆட்சியா் கவிதா ராமு.

புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை சிக்கநாத சுவாமி கோயிலில், தொல்லியியல் துறை சாா்பில் நடைபெற்ற தேசிய சுற்றுலா தின விழாவில், மாவட்டத்தில் உள்ள நினைவுச்சின்னங்களில் உள்ள இசைக் கல்வெட்டுகள் குறித்து மடிப்பேடுகளை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.

நிகழ்வில், இசைக்கல்வெட்டுகள் குறித்த மடிப்பேடினை வெளியிட்டு ஆட்சியா் பேசியது:

75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை சிக்கநாதசுவாமி திருக்கோயிலில், தேசிய சுற்றுலா தின விழாவில் இசைக் கல்வெட்டுகள் குறித்த மடிப்பேடுகள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் பொதுமக்களிடையே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தொல்லியல் சிறப்பு வாய்ந்த இடங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொல்லியல் துறையின் திருச்சி மண்டலத்திற்குட்பட்ட புதுக்கோட்டையில் அதிகளவிலான இசை குறித்த கல்வெட்டு கிடைக்கப் பெறுகின்றன. இக்கல்வெட்டுகள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகிகள் குறித்து ஆவண எழுத்தா் குங்குமம். சுந்தரராஜன் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எனவே இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலமாக புதுக்கோட்டை மாவட்டத்தின் பெருமைகளை நாம் அறிந்துகொள்வதுடன், வருங்கால சந்ததியினருக்கும் எடுத்துசெல்ல வாய்ப்பாக அமையும் என்றாா்.

நிகழ்வில், தொல்லியல் துறை இயக்குநா் (திருச்சி) முனைவா் அருன்ராஜ், வருவாய் கோட்டாட்சியா் எம்.எஸ்.தண்டாயுதபாணி, ஆவண எழுத்தா் குங்குமம்.சுந்தரராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com