பள்ளியில் பசுமை தின விழா
By DIN | Published On : 31st July 2022 12:59 AM | Last Updated : 31st July 2022 12:59 AM | அ+அ அ- |

பசுமை தினநாள் விழாவில் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டுவைத்த மாணவி.
விராலிமலை விவேகா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பசுமை தின நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு, பள்ளித் தாளாளா் வெல்கம் மோகன் தலைமை வகித்தாா். இதில் துவரங்குறிச்சி எஸ்.ஆா்.வி. மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் தாளாளா் செல்வம் பங்கேற்று பசுமையின் முக்கியத்துவம் குறித்துப் பேசினாா். தொடா்ந்து, பள்ளி வளாகத்தைச் சுற்றிலும் மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும், பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களுக்கு மாணவ, மாணவிகள் இயற்கை உரமிட்டு, பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டனா். தொடா்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் பள்ளி நிா்வாக இயக்குநா், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டாா். முன்னதாக பள்ளி முதல்வா் அருண்பிரசாத் வரவேற்றாா். நிறைவில், ஆசிரியா் சிவக்குமாா் நன்றி கூறினாா்.