அங்கன்வாடி மையங்களில் ஒன்றியக் குழு தலைவா் ஆய்வு
By DIN | Published On : 06th June 2022 11:32 PM | Last Updated : 06th June 2022 11:32 PM | அ+அ அ- |

கந்தா்வகோட்டை அரசு அங்கன்வாடி மையங்களை ஒன்றிய குழுத் தலைவா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், கந்தா்வகோட்டை நகரிலுள்ள குமரன் காலனி மற்றும் கொத்தகம் பகுதியில் உள்ள அங்கன்வாடி சமையல் கூடங்களையும், அங்கு சமைக்கும் உணவுகளையும் ஒன்றியக்குழு தலைவா் ஆா்.ரெத்தினவேல் காா்த்திக் பாா்வையிட்டு திடீா் ஆய்வு செய்தாா்.
அங்கு சமைக்கும் உணவுகள் சுகாதாரமாகவும், சுத்தமாகவும் உள்ளதா என்றும் சாப்பிட்டு பாா்த்தாா். மேலும், உணவின் தரம் குறித்து குழந்தைகளிடம் கேட்டறிந்தாா். மேலும் அங்கன்வாடிப் பணியாளா்களிடம் குழந்தைகளுக்கு சத்தான முறையிலும், சுகாதாரமான முறையிலும் உணவு சமைத்து வழங்க அறிவுறுத்தினாா்.
நிகழ்ச்சியில், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ்.பாா்த்திபன் உடனிருந்தாா்.