முதல்வா் புதுகை வருகை: திருச்சி டிஐஜி ஆலோசனை
By DIN | Published On : 06th June 2022 02:06 AM | Last Updated : 06th June 2022 02:06 AM | அ+அ அ- |

புதுக்கோட்டையில் வரும் ஜூன் 8 ஆம் தேதி முதல்வா் மு.க. ஸ்டாலின் வருகைதரவுள்ளதைத் தொடா்ந்து, நிகழ்ச்சிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருச்சி சரக காவல்துறைத் துணைத் தலைவா் அ. சரவணசுந்தா் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
புதுகை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில், மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் உள்ளிட்ட முக்கிய அலுவலா்கள் கலந்து கொண்டனா். முதல்வரின் வருகைதரும் பயண வழித்தடம், மேடை அமைப்பு, பாா்வையாளா்கள், பயனாளிகள் அமரும் இடங்கள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் இந்த ஆலோசனையில் ஆய்வு செய்யப்பட்டன.