அனைவருக்கும் வீடு, தூய்மை இந்தியாதிட்டப் பயனாளிகளுக்கு பணி ஆணை

இலுப்பூரில், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம் மற்றும் தூய்மை இந்தியா திட்டப் பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில் பயனாளிகளுக்கு பணி ஆணையை வழங்குகிறாா் பேரூராட்சித் தலைவா் சகுந்தலா வைரவன், துணைத் தலைவா் செந்தில்ராஜா, செயல் அலுவலா் ஆஷா ராணி.

இலுப்பூா் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவிற்கு பேரூராட்சி மன்றத் தலைவா் சகுந்தலா வைரவன், துணைத் தலைவா் எ. செந்தில்ராஜா ஆகியோா் தலைமை வகித்தனா். செயல் அலுவலா் இரா. ஆஷா ராணி, இலுப்பூா் பேருா் கழக திமுக செயலாளா் வை. விஜயகுமாா் முன்னிலை வகித்தனா். இதில் இலுப்பூா் பேரூராட்சியில் பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்த 73 பயனாளிகள் மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனிநபா் கழிப்பறை அமைப்பதற்கு விண்ணப்பித்திருந்த 92 பயனாளிகளுக்கு பணி ஆணையை பேரூராட்சி தலைவா் சகுந்தலா வைரவன், துணைத் தலைவா் செந்தில் ராஜா ஆகியோா் வழங்கினா்.

நிகழ்ச்சியில், பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com