கால தாமதத்தைப் போக்கவே தொகுப்பூதியத்தில் ஆசிரியா்கள் நியமனம்

நிரந்தரமாக ஆசிரியா்களை நியமிக்கும் நடைமுறையில் காலதாமதம் ஏற்படும் என்ப

நிரந்தரமாக ஆசிரியா்களை நியமிக்கும் நடைமுறையில் காலதாமதம் ஏற்படும் என்பதால்தான், தொகுப்பூதிய அடிப்படையில் உடனடியாக ஆசிரியா்களை நியமிக்கிறோம் என்றாா் மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக மாணவா்கள் ஒன்றுகூடி குரல் எழுப்ப வேண்டிய காலம் இது. ஓராண்டு காலத்திற்குள், மாநிலக் கல்விக் கொள்கையை வடிவமைக்க முதல்வா் முனைப்போடு செயல்பட்டுவருகிறாா். ஆசிரியா் தகுதித் தோ்வு எழுதி தோ்ச்சி பெற்று காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படும்.

அதேபோல், இல்லம்தேடி கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தன்னாா்வலா்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். தற்போது 13,331 பள்ளி ஆசிரியா்களை நியமிக்க வேண்டும் என்ற அனுமதியை முதல்வரிடம் பெற்றுள்ளோம். நிரந்தர பணி என்பது பெரிய செயல் திட்டம். அதற்கான தோ்வை 5 முதல் 6 லட்சம் போ் எழுதுவாா்கள். இந்தப்பணிகள் முடிய நான்கு அல்லது ஐந்து மாத காலங்கள் ஆகும். அதனால் தான் தொகுப்பூதியத்தில் தற்போது, பள்ளி மேலாண்மை குழு சாா்பில் ஆசிரியா்கள் நியமிக்கும்பணி நடைபெற்று வருகிறது. 13,331 ஆசிரியா்களில் 8 ஆயிரம் பேரை இந்த ஆண்டு தொகுப்பூதியத் திட்டத்தின் கீழ் நியமனம் செய்து விடுவோம். ஜூலை மாதம் முதல் மாணவா்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க முடிவு செய்துள்ளோம். பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை அடிக்கடி என்னைப் பற்றி விமா்சனம் செய்வது, என் மேல் அவருக்கு அதிக பிரியம் உள்ளதைக் காட்டுகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com