தலைமை ஒதுக்கியும் துணைத் தலைவர் பதவிகளை இழந்த இடதுசாரிகள்

திமுக கூட்டணித் தலைமையில் இருந்து இடதுசாரிக் கட்சிகளுக்கு தலா ஒரு துணைத் தலைவர் பதவியிடங்கள் ஒதுக்கப்பட்டும், மறைமுகத் தேர்தலில் வாய்ப்பை இழந்தனர். இரு இடங்களையும் திமுகவே கைப்பற்றியது.
தலைமை ஒதுக்கியும் துணைத் தலைவர் பதவிகளை இழந்த இடதுசாரிகள்

திமுக கூட்டணித் தலைமையில் இருந்து இடதுசாரிக் கட்சிகளுக்கு தலா ஒரு துணைத் தலைவர் பதவியிடங்கள் ஒதுக்கப்பட்டும், மறைமுகத் தேர்தலில் வாய்ப்பை இழந்தனர். இரு இடங்களையும் திமுகவே கைப்பற்றியது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 2 நகராட்சிகள், 8 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 189 இடங்களில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 இடங்களும் ஒதுக்கப்பட்டன.

இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கீரனூர் மற்றும் கீரமங்கலம் ஆகிய பேரூராட்சிகளில் 2 வார்டுகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கீரமங்கலத்தில் ஒரு வார்டிலும் மட்டுமே வெற்றி பெற்றன. மற்ற இடங்களில் தோல்வியடைந்தன. இந்தத் தோல்விக்குக் காரணம். திமுகவினரே சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றதுதான் காரணம்.

இந்நிலையில், தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கான இடஒதுக்கீட்டுப் பேச்சுவார்த்தையில், கீரமங்கலம் பேரூராட்சித் துணைத் தலைவர் பதவி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், கீரனூர் பேரூராட்சித் துணைத் தலைவர் பதவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

ஆனால், கீரனூர் பேரூராட்சியில் 6ஆவது வார்டில் வென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் மா. மகாலட்சுமி, துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடவில்லை. மாற்று ஏற்பாட்டைச் செய்துவிட்டதாகவும், விட்டுத்தர வேண்டும் என்றும் முதல் நாளே (வியாழக்கிழமை) மாவட்ட திமுக தலைமை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையை வலியுறுத்தியிருக்கிறது. இதன்படி திமுக வேட்பாளராக முகமது இம்தியாஸ் வேட்புமனுத் தாக்கல் செய்து வென்றார்.

கீரமங்கலம் பேரூராட்சியில் 11ஆவது வார்டில் வென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் த. முத்தமிழ்செல்வியை, துணைத் தலைவர் வேட்பாளராக திமுக தலைமை முன்மொழிந்தது. அதேநேரத்தில் திமுக உறுப்பினர் தமிழ்ச்செல்வனும் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இருவருக்கும் இடையே வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. தமிழ்ச்செல்வன் வென்றார். முத்தமிழ்செல்வி தோற்றார்.

இந்தச் சம்பவங்களை அடுத்து இடதுசாரிக் கட்சியினர் மாவட்ட திமுக நிர்வாகிகளிடம் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com