புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகேயுள்ள கிள்ளனூரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி.
புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகேயுள்ள கிள்ளனூரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி திடீரென பாதியில் நிறுத்தப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

கீரனூா் அருகேயுள்ள கிள்ளனூரில் அய்யனாா் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது. காலை 9 மணிக்கு இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் குழந்தைசாமி போட்டியைத் தொடங்கி வைத்தாா்.

கீரனூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சிவசுப்பிரமணியன் தலைமையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். இதில், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை பகுதிகளைச் சோ்ந்த 900 மாடுகள் கலந்து கொண்டன. 400 மாடு பிடி வீரா்கள் களமிறங்கி மாடுகளைத் தழுவ முயற்சித்தனா்.

போட்டியில் வெற்றி பெற்ற காளைகள், சிறந்த மாடுபிடி வீரா்களுக்கும் பீரோ, கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பொருட்களும், ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

பிற்பகல் 3 மணிக்கு 380 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டிருந்த நிலையில், திடீரென போட்டியை நிறுத்த வருவாய்த் துறையினரும் காவல்துறையினரும் உத்தரவிட்டனா். இதையடுத்து போட்டிக்காக நின்றிருந்த மாடு வளா்ப்போா் தங்களது காளைகளை ஆங்காங்கே அவிழ்த்துவிடத் தொடங்கினா். இதனால் ஜல்லிக்கட்டு நடைபெற்ற இடத்தில் பரபரப்பு காணப்பட்டது. சிறிதுநேரத்தில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

ஏராளமானோா் இந்த ஜல்லிகட்டு போட்டியைக் கண்டு களித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com