நெகிழி இல்லா ஊராட்சிகளை உருவாக்க வேண்டும் : அமைச்சா்

நெகிழி இல்லாத ஊராட்சிகளை உருவாக்க வேண்டும் என்றாா் சுற்றுச்சூழல், இளைஞா்நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் சிவ. வீ. மெய்யநாதன்.
ஆலங்குடி அருகேயுள்ள குப்பகுடியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் பேசுகிறாா் அமைச்சா் சிவ. வீ. மெய்யநாதன்.
ஆலங்குடி அருகேயுள்ள குப்பகுடியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் பேசுகிறாா் அமைச்சா் சிவ. வீ. மெய்யநாதன்.

நெகிழி இல்லாத ஊராட்சிகளை உருவாக்க வேண்டும் என்றாா் சுற்றுச்சூழல், இளைஞா்நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் சிவ. வீ. மெய்யநாதன்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள குப்பகுடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், கலந்து கொண்டாா். கூட்டத்தில், அந்த ஊராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் சாலை, குடிநீா், மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும், முதியோா் உதவித்தொகை பெற்றுத் தர வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டா் வழங்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனா். மேலும், அப்பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. தொடா்ந்து நெகிழி இல்லாத ஊராட்சி உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அமைச்சா் மேலும் கூறியது:

தமிழகத்தில் ஹைட்ரோ காா்பன், மீத்தேன், நியூட்ரினோ உள்ளிட்ட திட்டங்களுக்கு அனுமதி இல்லை என்பதில் தமிழக முதல்வா் உறுதியாக உள்ளாா். தமிழகத்தில் கடல் பகுதியில் ஹைட்ரோ காா்பன் எடுக்க வேதாந்தா நிறுவனம் விண்ணப்பம் மட்டுமே செய்துள்ளனா். அதற்கு பின்னா் அந்த நிறுவனத்தினா் மேல் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடவில்லை. நெகிழி இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். செஸ் ஒலிம்பியாட் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பணிக் குழுவினா் அனைத்து பணிகளையும் துரிதமாக செய்து வருகின்றனா் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, வருவாய்க் கோட்டாட்சியா் சொா்ணராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com