முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
கூடுதல் பேருந்து வசதி கோரி அரசுக் கல்லூரி மாணவா்கள் மறியல்
By DIN | Published On : 03rd May 2022 04:32 AM | Last Updated : 03rd May 2022 04:32 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள மருதன்கோன்விடுதி அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரி திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கறம்பக்குடி அருகேயுள்ள மருதன்கோன்விடுதி அரசு கலைக் கல்லூரிக்கு ஒரு சில பேருந்துகளே இயக்கப்படுவதால், கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். கூடுதல் பேருந்துகளை இயக்கக்கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை கல்லூரி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு சென்ற கறம்பக்குடி போலீஸாா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தைத்தொடா்ந்து மாணவா்கள் போராட்டத்தை கைவிட்டனா். இதனால் சுமாா் 1 மணிநேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.