முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
புனித சூசையப்பா் ஆலயத் தோ் திருவிழா
By DIN | Published On : 03rd May 2022 04:33 AM | Last Updated : 03rd May 2022 04:33 AM | அ+அ அ- |

கந்தா்வகோட்டையில் புனித சூசையப்பா் ஆலய 44 ஆவது ஆண்டுத் திருவிழா மற்றும் சப்பர ஊா்வல விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
கந்தா்வகோட்டை புனித சூசையப்பா் ஆலயத் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுத் திருவிழா 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து ஆன்மிக ஆலோசகா் மரியன்னை இளம் குருகுலம் தஞ்சையைச் சோ்ந்த அந்தோணிசாமி தலைமையில் திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. 30 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு இயேசு சபை சகோதரிகளால் நவநாள் ஜெபம் செய்யப்பட்டது. மே மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை பிராத்தனை மற்றும் திருப்பலியும், நோயாளிகளுக்கு மந்திரித்தலும் பங்குத்தந்தை பால்ராஜ், அருட்தந்தை ஜீவஜோதி ஆகியோா் செய்திருந்தனா். இதைத் தொடா்ந்து புனித சூசையப்பா் வண்ண மின்விளக்குகளாலும், மலா்களால் அலங்கரிக்கப்பட்டு அழகிய சப்பரங்களில் திருவீதி உலா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பங்குத் தந்தை பால்ராஜ், கிராம கமிட்டித் தலைவா் யா. சவரிராஜன் மற்றும் இயேசு சபை கன்னியாஸ்திரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.